Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சிக்ஸ்பேக்கை தொடங்கி வைத்த அஜித்; ஏ.ஆர்.முருகதாஸ் புது தகவல்

சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜூ மேனன், ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் நடித்துள்ள ‘மதராஸி’ என்ற படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகும் இப்படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில், ‘இதில் ரகு என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இது ஒரு சாதாரண மனிதனில் இருந்து சிறிது அப்பாற்பட்ட கேரக்டர் என்பதால், 7 வருடங்களுக்கு முன்பு இது பற்றி ஷாருக்கானிடம் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்தது என்றாலும், அன்றைய சூழ்நிலையில் அப்படம் குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ‘மதராஸி’ படம் 2 மணி, 45 நிமிடங்கள் ஓடும். அஜித் குமார் நடித்த ‘தீனா’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானேன்.

மீண்டும் அவரை வைத்து ‘கஜினி’ படத்தை இயக்க ஒப்பந்தமானேன். அப்போது அதன் தலைப்பு, ‘மிரட்டல்’. பிறகு ‘கஜினி’ என்று பெயர் மாற்றினேன். சஞ்சய் ராமசாமி கேரக்டரில் அஜித் குமார் நடித்த காட்சிகளை 2 நாட்கள் மட்டுமே படமாக்கினேன். பிறகு அவர் நடிக்க முடியாத நிலையில் சூர்யா நடித்தார். இப்படத்துக்காக அஜித் குமார் மாற்றிய உடலமைப்பை பார்த்தால் மிகவும் பிரமிப்பாக இருக்கும். அவர்தான் இந்த கேரக்டருக்கு சிக்ஸ்பேக் வைக்கலாம் என்று ஐடியா கொடுத்தார். அப்போது சிக்ஸ்பேக் என்ற கான்செப்ட் கிடையாது. பிறகு சூர்யா, ஆமிர் கான் ஆகியோரை நான் இயக்கியபோது, அவர்களை சிக்ஸ்பேக் வைக்கும்படி நான் சொன்னதற்கு காரணகர்த்தாவே அஜித் குமார்தான். ‘கஜினி’ படத்துக்கு பிறகே தமிழ் படவுலகில் சிக்ஸ்பேக் என்ற கலாசாரம் உருவானது’ என்றார்.