சென்னை: இந்தியில் பிரியதர்ஷன் இயக்கும் படம், ‘ஹைவான்’. இதில் 17 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அக்ஷய் குமார், சைஃப் அலிகான் இணைந்து நடிக்கின்றனர். ஊட்டி, மும்பை, கொச்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தை மட்டுமின்றி, தமிழில் ‘ஜன நாயகன்’, கன்னடத்தில் ‘கேடி’, யஷ் நடிக்கும் ‘தி டாக்ஸிக்’ ஆகிய படங்களை வெங்கட் கே.நாராயணா தயாரித்து வருகிறார். அவரது கே.வி.என் புரொடக்ஷன்ஸ் குழுவில் தெஸ்பியன் பிலிம்ஸ் ஷைலஜா தேசாய் ஃபென் இணைந்துள்ளார்.
+