Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மது குடிக்கும் சம்யுக்தா: பகீர் தகவல்

மது குடிக்கும் சம்யுக்தா: பகீர் தகவல்

மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்து வரும் சம்யுக்தா மேனன், ‘பார்ட்டிக்கு சென்றால் மது அருந்துவேன்’ என்று கடந்த மார்ச் மாதம் வெளிப்படையாக பேசியிருந்த விஷயம், தற்போது பல இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் கூறியதாக வெளியான செய்தியில், ‘நான் பார்ட்டியில் பங்கேற்கும்போது ஆல்கஹால் எடுத்துக்கொள்வேன். ஆனால், எல்லா பார்ட்டிகளிலும் இல்லை.

எனக்கு நெருங்கிய நண்பர்கள் சம்பந்தப்பட்ட பார்ட்டிகளில் மட்டும், அதுவும் குறைந்த அளவில் மட்டுமே ஆல்கஹால் அருந்துவேன். எப்போதாவது அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போதும், அதிக டென்ஷனில் இருக்கும்போதும் நான் ஆல்கஹால் எடுத்துக்கொள்வேன்’ என்று தயக்கம் இல்லாமல் கூறியுள்ளார். ‘உள்ளதை உள்ளபடி, எவ்வித தயக்கமும் இல்லாமல் வெளியே சொல்ல தைரியம் வேண்டும்’ என்று சிலர் அவரது கருத்துக்கு கமென்ட் வெளியிட்டுள்ளனர்.