மும்பை: மிருணாள் தாக்கூர் அளித்த ஒரு பேட்டியில், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த பிபாஷா பாசுவை உருவகேலி செய்யும் வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ நேற்று இணையதளத்தில் வைரலானது. ‘பிபாஷா பாசு ஆண் போன்ற தோற்றத்துடன் இருக்கிறார். அவரைவிட நான் எவ்வளவோ பரவாயில்லை’ என்று மிருணாள் தாக்கூர் பேசிய அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ள நிலையில்,...
மும்பை: மிருணாள் தாக்கூர் அளித்த ஒரு பேட்டியில், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த பிபாஷா பாசுவை உருவகேலி செய்யும் வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ நேற்று இணையதளத்தில் வைரலானது. ‘பிபாஷா பாசு ஆண் போன்ற தோற்றத்துடன் இருக்கிறார். அவரைவிட நான் எவ்வளவோ பரவாயில்லை’ என்று மிருணாள் தாக்கூர் பேசிய அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த வீடியோ பல வருடங்களுக்கு முன் மிருணாள் தாக்கூர், டிவி நடிகையாக இருந்தபோது எடுக்கப்பட்டது என்றும் இப்போது இது ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது. இதையடுத்து பிபாஷா பாசு வெளியிட்டுள்ள பதிவில், மிருணாள் தாக்கூருக்கு சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார். அப்பதிவில் அவர், ‘வலிமையான பெண்கள் மற்றவர்களையும் உயர்த்தி விடுவார்கள். அழகிய பெண்களே கட்டுமஸ்தான உடம்பை வைத்துக்கொள்ளுங்கள். பெண்கள் உடல்ரீதியாக வலிமையாக இருக்கக்கூடாது என்ற பழங்கால எண்ணத்தை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.
திடீர் மன்னிப்பு: இந்நிலையில் இந்த பேட்டி தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் மிருணாள் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘19 வயதில் டீனேஜ் பெண்ணாக சில முட்டாள்தனமான விஷயங்களை பேசி இருக்கிறேன். நான் பேசிய வார்த்தைகள் எந்தளவுக்கு காயப்படுத்தும் என்பதை நான் அப்போது புரிந்திருக்கவில்லை.
இப்போது எனக்கு 35 வயதாகிறது. அப்போது பேசியதற்காக, இப்போது நான் ஆழமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் பாடி ஷேமிங் செய்ய வேண்டும் என்பது என் எண்ணமில்லை. விளையாட்டாக அந்த பேட்டியில் பேசியது இந்த அளவுக்கு சென்று இருக்கிறது. நான் என் வார்த்தைகளை வேறு விதமாக பயன்படுத்தி இருக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.