மும்பை: ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான ‘கஹோ நா பியார் ஹை’ என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமிஷா படேல். தமிழில் விஜய்யுடன் ‘புதிய கீதை’ என்ற படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது கேமியோ ரோலில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ஹாலிவுட் நடிகர் ஒருவரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.
அவர் பேசும்போது, ‘‘ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் தீவிர ரசிகை நான். சிறு வயதில் இருந்தே அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். பள்ளி பருவத்தில் என்னுடைய பென்சில் பாக்ஸ் மற்றும் வீட்டு படுக்கையறை சுவர்களில் அவரது புகைப்படத்தால் நிரம்பியிருந்தது. அந்த காதல் இன்னும் மங்கவில்லை. அவருக்காக நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் அவரையே திருமணம் செய்துகொள்வேன். இல்லாவிட்டால் அவருடன் ஓர் இரவை செலவிடவும் தயாராக இருக்கிறேன்’’ என்று பேசியுள்ளார். அவரது இந்த ஆபாச பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.