சென்னை: டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்துள்ள படம், ‘ஆண்பாவம் பொல்லா தது’. இதில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடித்துள்ளனர். கலையரசன் தங்கவேல் எழுதி இயக்க, சித்து குமார் இசை அமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 31ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த 1985ல் பாண்டியராஜன் எழுதி இயக்கி நடித்த ‘ஆண்பாவம்’ என்ற படத்துக்கும், இப்படத்துக்கும் தலைப்பை தவிர வேறெந்த சம்பந்தமும் இல்லை என்றனர்.
+