Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அனந்தா பக்தி படமா? சுரேஷ் கிருஷ்ணா

சென்னை: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரித்துள்ள படம், ‘அனந்தா’. பா.விஜய் வசனம், பாடல்கள் எழுதியுள்ளார். தேவா இசை அமைத்துள்ளார். ஜெகபதி பாபு, சுஹாசினி, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ஸ்ரீரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம் நடித்துள்ளனர். பி.எல்.சஞ்சய் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் குறித்து சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது: இது வழக்கமான பக்தி படம் இல்லை.

மீண்டும் எழும் ஒரு நடனக்கலைஞர், இழப்பில் கருணையை கண்டறியும் ஒரு மனிதன், ஒரு அற்புதத்தை காணும் தாய், இயற்கையின் அமைதியில் நம்பிக்கையை கண்டறியும் ஒரு வெளிநாட்டுக்காரர், கண்ணுக்கு தெரியாத அருளால் காப்பாற்றப்படும் ஒரு தொழிலதிபர் ஆகியோரை பற்றிய 5 கதைகள் இறுதியில் இணையும்போது, தெய்வீகம் என்பது கோயில்களிலோ அல்லது அற்புதங்களிலோ மட்டும் அடங்குவதில்லை என்பது புலப்படும். உலகளாவிய விநியோக உரிமையை ஏபி இண்டர்நேஷனல் வாங்கியுள்ளது. சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 23ம் தேதி முதல் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.