Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆனந்தி நடிக்கும் ‘ஒயிட் ரோஸ்’

சென்னை: இயக்குனர் சுசி கணேசன் உதவியாளர் ராஜசேகர் இயக்கி இருக்கும் படம், ‘ஒயிட் ரோஸ்’. இதில் ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடிக்க, ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். வி.இளையரஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோஹன் ஷெவனேஷ் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ரஞ்சனி தயாரித்துள்ளார். படம் குறித்து ராஜசேகர் கூறும்போது, ‘ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் ஒரு மிருகம் மறைந்திருக்கும். அது நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களை விட மிகவும் ஆபத்தானது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண பெண், இதுபோன்ற மிருகத்திடம் சிக்கி என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கிறார்? அதிலிருந்து அவரால் மீண்டு வர முடிகிறதா என்று, பல்வேறு திருப்பங்களுடன் கூடிய படமாக இது உருவாகிறது. ‘கயல்’ ஆனந்தி நிறைய படங்களில் தனது அழகான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். ஆனால், இப்படம் அவரது திரைப்பயணத்தில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்பது உறுதி’ என்றார்.