சென்னை: ‘பரமு’, ‘செல்ஃபிஷ்’ ஆகிய படங்களை தொடர்ந்து மாணிக் ஜெய்.என், ‘கைமேரா’ என்ற பான் இந்தியா படத்தை ஜெய் ருத்ரா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார். எல்என்டி எத்திஷ் ஹீரோவாக நடித்துள்ளார். சவுமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி ஹீரோயின்களாக நடித்துள்ளனர். வினோத் ஒளிப்பதிவு செய்ய, விக்னேஷ் ராஜா இசை அமைத்துள்ளார். மோகன் ராஜன், கவி கார்கோ...
சென்னை: ‘பரமு’, ‘செல்ஃபிஷ்’ ஆகிய படங்களை தொடர்ந்து மாணிக் ஜெய்.என், ‘கைமேரா’ என்ற பான் இந்தியா படத்தை ஜெய் ருத்ரா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார். எல்என்டி எத்திஷ் ஹீரோவாக நடித்துள்ளார். சவுமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி ஹீரோயின்களாக நடித்துள்ளனர். வினோத் ஒளிப்பதிவு செய்ய, விக்னேஷ் ராஜா இசை அமைத்துள்ளார். மோகன் ராஜன், கவி கார்கோ பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், பொதுச்செயலாளர் பேரரசு, மீரா கதிரவன், கோமல் சர்மா கலந்துகொண்டனர்.
மனித உடம்பிற்குள் மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டு, மனிதனின் குணம் மிருக குணமாக மாறினால், அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மையப்படுத்தி, சயின்ஸ் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஹீரோ மிருக குணம் கொண்ட கேரக்டராகவே மாறி பல மாதங்கள் நடித்ததால், படப்பிடிப்பு முடிவடைந்து 2 மாதங்களாகியும் அந்த கேரக்டரின் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவித்தார். பிறகு மருத்துவ சிகிச்சை பெற்று மீண்டார். எல்லா பாடல்களும் அனுராதா பட்டுக்கு பிடித்திருந்ததால், 5 மொழிகளிலும் அவரே பாடியுள்ளார்.