Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அனிருத் புதிய சாதனை

தமிழ்ப் படவுலகின் முன்னணி இசை அமைப்பாளரும், பாடகருமான அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள், அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது. ரசிகர்களின் விருப்பத்துக்காக மேடை இசை நிகழ்ச்சியை நேரடியாக நடத்தி, அவர்களை உற்சாகப்படுத்துவதை அனிருத் வழக்கமாக வைத்துள்ளார். சர்வதேச அளவிலான அவரது இசைப் பயணம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நிலையில், வரும் 26ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள திருவிடந்தை என்ற இடத்தில், ‘ஹூக்கும்’ என்ற பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேரடியாக பங்கேற்கும் மிகப் பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை சென்னையில் தொடங்கியது. ஆனால், தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதில் பல ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. கூடுதல் டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று, சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை பதிவிட்டுள்ளனர்.