Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘ஐ லவ் யூ’ சொன்ன அனுஷ்கா

கடைசியாக அனுஷ்காவுக்கு `பாகுபலி’ படத்தின் 2 பாகங்கள் மட்டுமே மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருந்தது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் அவர் நடித்துள்ள `காத்தி’ என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. முன்னதாக அனுஷ்கா, பிரபாஸ் இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது. அவர்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டிக்கொண்டனர். ஆனால், ‘நாங்கள் இருவரும் நண்பர்கள்’ என்று சொல்லி, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். 43 வயதாகும் அனுஷ்கா, தனக்கு வந்த முதல் ‘லவ் புரபோஷல்’ குறித்து கூறுகையில், ‘நான் 6ம் வகுப்பு படிக்கும்போது, என் வகுப்பை சேர்ந்த ஒரு பையன், ‘உன்னை நான் உயிருக்குயிராக காதலிக்கிறேன்.

ஐ லவ் யூ’ என்று சொன்னான். அவன் தைரியமாக பேசியது என்னை வியக்க வைத்தது. அந்த வேளையில், ‘ஐ லவ் யூ’ என்றால் என்ன அர்த்தம் என்றுகூட எனக்கு தெரியாது. எனினும் நான் ஓ.கே சொன்னேன். அதை இன்று நினைக்கும்போது இனிய அனுபவமாக இருக்கிறது’ என்றார். ஆனால், அவரது திருமணம் எப்போது என்று பதில் ெசால்லவில்லை.