Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அனுஷ்காவுக்கு வக்காலத்து வாங்கிய சுனைனா

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர், அனுஷ்கா. முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தது மட்டுமின்றி, ‘அருந்ததீ’ போன்ற ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட சில படங்களிலும் நடித்து தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தினார். ஆனால், திடீரென்று அவர் எடுத்த ஒரு முடிவு, அவரது சினிமா கேரியரை காலி செய்துவிட்டது என்று ரசிகர்கள் சொல்கின்றனர். அதாவது, ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படத்தில் அவர் தனது உடல் எடையை அதிகரித்து நடித்த பின்பு, அவர் மேலும் குண்டாகி, அதற்கு பிறகு எடையை குறைக்க முடியாமல் அவதிப்பட்டார்.

அதனால்தான் அவர் புதிய படங்கள் எதிலும் நடிக்காமல், வெளியில் எந்த நிகழ்ச்சிகளுக்கும் கூட செல்லாமல் இருக்கிறார். எனவே, அனுஷ்காவின் கேரியரை அழித்த படம் இதுதான் என்று, நெட்டிசன் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதற்கு சக நடிகை சுனைனா கமென்ட் செய்துள்ளார். ‘மரியாதையுடன், இதை வேறு விதமாக பார்க்க வேண்டும். நடிகர்கள் எக்ஸ்பிரிமெண்ட் செய்ய வேண்டும். அது வேகத்தை குறைத்து இருந்தாலும், எதையும் நாசமாக்கவில்லை.

விரும்பத்தக்க தோற்றம் என்ற ஒன்றை அது பாதித்து இருக்கலாம். ஏனெனில், படம் சரியாக ஓடவில்லை என்பதால். ஆனால், அவரது திறமை அப்படியேதான் இருக்கிறது. கலையை பற்றி நீங்கள் யோசிப்பதை இன்னும் விரிவுபடுத்துங்கள். அனுஷ்கா அற்புதமாக இருந்தார். அதற்கு பிறகும் அற்புதமாகத்தான் இருக்கிறார்’ என்று, அனுஷ்காவுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார்.