Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அர்ஜூன் மகள், தம்பி ராமய்யா மகன் காதல் திருமணம்

சென்னை: அர்ஜூன் மூத்த மகள் ஐஸ்வர்யா, ‘பட்டத்து யானை’ படத்தில் அறிமுகமானார். பிறகு தமிழிலும், கன்னடத்திலும் அர்ஜூன் இயக்கிய ‘சொல்லிவிடவா’ படத்தில் நடித்தார். தம்பி ராமய்யா மகன் உமாபதி. ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தில் அறிமுகமான அவர், தம்பி ராமய்யா இயக்கத்தில் ‘மணியார் குடும்பம்’, சேரன் இயக்கத்தில் ‘திருமணம்’ மற்றும் ‘தண்ணி வண்டி’ படத்தில் நடித்துவிட்டு, ‘தேவதாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். சமுத்திரக்கனி, தம்பி ராமய்யா நடிக்கும் ‘ராஜாக்கிளி’ படத்தை இயக்குகிறார். ஐஸ்வர்யாவும், உமாபதியும் 2 வருடங்களாக காதலிக்கின்றனர். அவர்களின் காதலை அறிந்த இருவீட்டு பெற்றோர், வரும் தை மாதம் ஐஸ்வர்யா, உமாபதி திருமணம் நடப்பதை உறுதி செய்தனர். இதுகுறித்து தம்பி ராமய்யா கூறுகையில், ‘அர்ஜூன் நடத்திய டி.வி நிகழ்ச்சியில் உமாபதி பங்கேற்றார். அப்போது உமாபதியும், ஐஸ்வர்யாவும் காதலித்தனர். இதையறிந்த நாங்கள் பச்சைக்கொடி காட்டினோம். வரும் நவம்பர் 8ம் தேதி உமாபதி பிறந்தநாளில், திருமண தேதி குறித்து அறிவிப்போம்’ என்றார்.