சென்னை: ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் பனையூரில் நடந்தது. ஏசிடிசி ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒன்று இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மொத்தமாகவே 35 ஆயிரம் டிக்கெட்டுகள் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், அதைவிட அதிகமான டிக்கெட்டுகள் விற்றதாக கூறுகிறார்கள். இதனால் இந்நிகழ்ச்சி நடந்த இடத்தில் பெரும் குழப்பமும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது....
சென்னை: ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் பனையூரில் நடந்தது. ஏசிடிசி ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒன்று இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மொத்தமாகவே 35 ஆயிரம் டிக்கெட்டுகள் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், அதைவிட அதிகமான டிக்கெட்டுகள் விற்றதாக கூறுகிறார்கள். இதனால் இந்நிகழ்ச்சி நடந்த இடத்தில் பெரும் குழப்பமும், சலசலப்பும்
ஏற்பட்டுள்ளது.
தரவரிசைப்படி கோல்டு டிக்கெட் ரூ.2000, பிளாட்டினம் மற்றும் டைமண்ட் போன்ற டிக்கெட்களின் விலை ரூ.5000 மற்றும் ரூ.10000 என நிர்ணயித்துள்ளனர். மேலும் அதற்கு மேல் வைத்தும் விற்பனை ஆகியுள்ளது. ஆனால், யார் யார் எந்தெந்த டிக்கெட் வாங்கியுள்ளார்கள் என்று கவனிக்காமல் 35 ஆயிரம் பேரை உள்ளே அனுமதித்துள்ளனர். மற்றவர்களுக்கு உள்ளே அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய அனைவரும் கடும் கோபமடைந்துள்ளனர்.
விழாவில் இருந்த பாதுகாவலர்களுடன் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளு, கூட்ட நெரிசலில் ரசிகர்கள் சிலர் மயங்கியும் விழுந்துள்ளனர். இப்படியொரு பித்தலாட்டமா என பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள். மேலும் இதன்மூலம் ரசிகர்கள் தங்களது பணத்தையும் இழந்துள்ளனர். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டாகிராமில் கூறும்போது, ‘பணம் செலுத்தி நிகழ்ச்சி பார்க்க முடியாத ரசிகர்கள், மெயில் மூலம் தொடர்புகொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் விழித்துக்கொள்ள நானே பலி ஆடு ஆகிறேன். இதுபோன்ற நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு வசதிகள் செய்ய வேண்டும்’ என்று ெதரிவித்துள்ளார்.