Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அருண் விஜய் வெளியிட்ட விக்ராந்த்தின் வில் டீஸர்

சென்னை: விக்ராந்த்- சோனியா அகர்வால் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கும் ‘வில் ‘எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை அருண் விஜய் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தின் உருவாகியுள்ள ‘வில்’ திரைப்படத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா, பதம் வேணு குமார், மோகன் ராமன் , சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

டி. எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நடிகை சோனியா அகர்வாலின் சகோதரரான சௌரப் அகர்வால் இசையமைத்திருக்கிறார். நீதிமன்ற பின்னணியில் நடைபெறும் இந்த திரைப்படத்தை ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இயக்குனர் சிவராமன் கூறும்போது, ‘‘உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வருவதால்.. மக்களுக்கு நன்மை செய்வதில் நீதிமன்றத்தின் பங்களிப்பு குறித்த விவரங்களை முழுமையாக விவரித்திருக்கிறேன்’’ என்றார்.