‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ஃபர்ஹானா’ ஆகிய படங்களை தொடர்ந்து நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கிய ‘டிஎன்ஏ’ என்ற படம் வெற்றிபெற்றுள்ளது. இதையொட்டி சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அதர்வா, ‘இப்போது எனக்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் இப்படத்தில் பணியாற்றும்போது, இப்படியொரு வெற்றியை கொண்டாடி மகிழும் தருணத்துக்காகவே காத்திருந்தோம்....
‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ஃபர்ஹானா’ ஆகிய படங்களை தொடர்ந்து நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கிய ‘டிஎன்ஏ’ என்ற படம் வெற்றிபெற்றுள்ளது. இதையொட்டி சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அதர்வா, ‘இப்போது எனக்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் இப்படத்தில் பணியாற்றும்போது, இப்படியொரு வெற்றியை கொண்டாடி மகிழும் தருணத்துக்காகவே காத்திருந்தோம். இங்கு நானும் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். முதல் நாள் படப்பிடிப்பில், ஒரு நல்ல படத்தில் நடிக்கிறேன் என்று நம்பினேன். மக்கள் எப்படி வரவேற்பார்கள் என்று யோசிக்கவில்லை. ஒரு நல்ல நேர்மையான படத்துக்கு மக்கள் பேராதரவு கொடுத்துள்ளனர். தற்போது இந்த உலகத்தில் அதிக சந்தோஷமாக இருக்கும் மனிதன் நான்தான் என்று சொல்வேன்’ என்றார்.
நிமிஷா சஜயன் பேசும்போது, ‘நான் நடிக்கும் படங்கள் ரிலீசாகும்போது ஒருவிதமான பயம் இருக்கும். ஆனால், இப்படத்தை பொறுத்தவரை அந்த பயம் எனக்கு ஏற்படவில்லை. அனைவரும் நான் நன்றாக நடித்ததாக சொல்லி பாராட்டுகின்றனர். அந்த கிரெடிட் இயக்குனரைத்தான் சேரும். அதர்வா அதிக திறமைகள் கொண்ட ஒரு நடிகர். ஆனந்த் என்ற அவர் இல்லை என்றால், திவ்யா என்ற என் கேரக்டர் முழுமையாக இருந்திருக்காது’ என்றார். போஸ் வெங்கட் பேசுகையில், ‘கேரளாவில் நடக்கும் படப்பிடிப்புகளில் ஐந்து கேரவன் இருந்தால், அதில் எழுத்தாளருக்கு ஒரு கேரவன் கொடுக்கப்படும். அங்கு கதாசிரியர்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்கப்படும். எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் என்பவர்கள் தனி செக்டார். அந்த செக்டார் நன்றாக இருந்தால், உறுதியாக இருந்தால் படங்கள் தோற்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும். அந்தவகையில் ஒரு திரைக்கதை ஆசிரியரை மேடை ஏற்றி, அவருக்கு மரியாதை செலுத்திய நெல்சன் வெங்கடேசனுக்கு நன்றி’ என்றார்.