Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அதர்வா, மணிகண்டன் இணையும் “மத்தகம்”

நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில், இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'மத்தகம்' சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத இந்த டீசர் மொத்த சீரிஸின் கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் என்பதை அழகாக விவரிக்கிறது. வெளியான வேகத்தில் இணையம் முழுக்க இந்த டீசர் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது.

டீசரின் காட்சிகளில் அதர்வா ஒரு தீவிரமான போலீஸ்காரராகவும், குட் நைட் புகழ் மணிகண்டன் முதல் முறையாக ஒரு வில்லத்தனம் மிகுந்த கேங்ஸ்டராகவும் தோன்றுகிறார்கள். வெகு சிறப்பாக எடிட் செய்யப்பட்டிருக்கும் டீசர், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கூட்டுவதுடன், இந்த சீரிஸ் ஒரு அற்புதமான த்ரில்லராக இருக்கும் என்பதை வலுவாக வெளிப்படுத்துகிறது. ஒரு இரவில் என்ன செய்ய முடியும் என்று கேட்கும் குரலுடன் டீஸர் தொடங்குகிறது. அதன்பிறகு அது அந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில் வெகு பரபரப்பான காட்சிகளைக் காட்சிப்படுத்துகிறது, பரபரப்பான ரோலர்-கோஸ்டர் சவாரிக்கு ரசிகர்கள் தயாராகலாம்.

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பில், உருவாகியுள்ள இந்த சீரிஸை இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும், இந்த சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மத்தகம் என்பது யானையின் முன்நெற்றியை குறிக்கும் சொல் ஆகும் யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும். இந்த சீரிஸுன் பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளைப் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார். சுரேஷ் கல்லரி கலை இயக்கம் செய்துள்ளார்.