Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கண்கலங்க வைத்த அபிராமி

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்க, யூடியூப் பிரபலம் ராஜ்மோகன் ஆறுமுகம் இயக்கும் படம், ‘பாபா பிளாக்‌ஷீப்’. பள்ளிக் குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள் மற்றும் அவர்களின் இன்ப, துன்பங்கள் இணைந்த திரைக்கதையுடன், உணரச்சிகரமான படமாக உருவாகும் இதில், அம்மா வேடத்தில் அபிராமி நடிக்கிறார். இதுகுறித்து ராஜ்மோகன் ஆறுமுகம் கூறுகையில், ‘ஒரு குழந்தையைப் பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அம்மா கதாபாத்திரம் இருந்தது. இதற்காக அபிராமியை அணுகினேன்.

கதையைக் கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் அறிமுக நடிகை போல் என்னிடம் கருத்து கேட்டு, அவரது கதாபாத்திரத்தை அட்டகாசமாக திரையில் கொண்டு வந்துள்ளார். மிகவும் உணரச்சிகரமான ஒரு காட்சியில் அவரது நடிப்பைப் பார்த்து படக்குழுவினர் கண்கலங்கி கைத்தட்டினர். இப்படம் அபிராமிக்கு திருப்புமுனையாக இருக்கும்.

மதுரை முத்து, ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு, சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட், அயாஸ், நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி, வினோதினி வைத்தியநாதன், சேட்டை ஷெரீப், நக்கலைட்ஸ் பிரசன்னா, கேபிஒய் பழனி, ஓஏகே சுந்தர், நக்கலைட்ஸ் தனம் நடிக்கின்றனர். சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். யுகபாரதி, ஏ.பா.ராஜா, ஆர்ஜே விக்னேஷ்காந்த் பாடல்கள் எழுதுகின்றனர்’ என்றார்.