சென்னை: நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில் யூடியூப் வீடியோ லிங்க் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த லிங்கில், ‘சற்று முன் பரபரப்பு.. பார்த்திபன் இறைவனடி சேர்ந்தார்’ என எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோ குறித்து காட்டமாக தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்தை பதிவிட்டுள்ளார் பார்த்திபன். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இது போன்ற செய்திகள் மரணமடைய வேண்டும். இதை தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காக செய்தாலும் …. மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? என சம்மந்தப் பட்டவர்களின் குடும்பம், அது தாயோ தாரமோ பெற்றதுகளோ யோசிக்க வேண்டும். இது பல முறை, என்னை மட்டுமல்ல பலரையும் இறைவனடி சேர shortest route ticket வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களாகவே திருந்த அந்த சுடுகாட்டு சுடலை சாமியோ, ஆறாவது அறிவோ உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
+