Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆன்மிக விழாவில் பாலா

காமெடி நடிகராக இருந்து கதையின் நாயகனாக மாறியிருக்கிறார், கேபிஒய் பாலா. சமீபத்தில் அவர் ஆன்மிக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழாவையொட்டி, ‘தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கிள்ஸ் அன்ட் சீக்ரெட்ஸ்’ என்ற புத்தகத்தின் 2ம் பாகம் வெளியிடப்பட்டு, ‘சுக ஞானானநந்தம்’ என்ற இசை ஆல்பமும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சக இயக்குனர் டாக்டர் ஏ.நஜீரூல் அமீன், நடிகர் ராமகிருஷ்ணா, பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் பங்கேற்று பேசினர்.

திரைத்துறை, தொழில்துறை, விளையாட்டு துறை, விவசாய துறை, சமூக செயல்பாட்டாளர்கள் உள்பட பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கேபிஒய் பாலா, தற்போது ‘காந்தி கண்ணாடி’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.