Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பெட்ரூம் காட்சியில் நடிக்கும்போது 17 முறை ஒரே கேள்வி கேட்ட நடிகர்: நடிகை கிரிஜா ஓபன் டாக்

மும்பை: ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவய்யா, ‘தெரபி ஷெரபி’ என்ற வெப் சீரிஸில் நடிகை கிரிஜா ஓக் உடன் நெருக்கமான காட்சியில் நடிக்கும்போது அவர் எப்படி நடந்து கொண்டார் என்பது குறித்து நடிகை கிரிஜா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘அந்த நெருக்கமான பெட்ரூம் காட்சியில் நடிக்கும் முன்னர் எனக்குள் பல கேள்விகள் இருந்தது. ஆனால் எனது கேள்விகளையும் தயக்கங்களையும் குல்ஷன் படப்பிடிப்பு முன்னரே நீக்கிவிட்டார்.

அவர் காட்சியில் நடிப்பதற்கு முன்னர் சுமார் நான்கு தலையணைகளை கொண்டு வந்து அதில் எனக்கு எது சௌகரியமாக இருக்கிறது என்று கேட்டார். அதில் ஒன்றை தேர்வு செய்யச் சொன்ன அவர், அதையே படப்பிடிப்பில் பயன்பத்தினார். படுக்கையறைக் காட்சிகளை பொறுத்தவரையில் என்னதான் பல முன் ஏற்பாடுகள் செய்திருந்தாலும், நடிக்கும்போது கொஞ்சமாவது அசௌகரியம் இருக்கும். அப்படியான அசௌகரியத்துடன் தான் நடிக்க வேண்டும்.

ஆனால், நடிகர் குல்ஷன் அப்படியானவர் இல்லை. அவருடன் நடிக்கும்போது நான் ஒரு சதவீத அசௌகரியத்தை கூட உணரவில்லை. நெருக்கமான காட்சி படமாக்கப்பட்டு கொண்டு இருக்கும்போது, அதாவது நாங்கள் நடித்துக் கொண்டு இருக்கும்போதே என்னிடத்தில் சுமார் 16 முதல் 17 முறை நான் சௌகரியமாக உணர்கிறேனா என்பதைக் கேட்டு கேட்டு நடித்தார். நெருக்கமாக நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு தலையணை எனக்கு அசௌகரியமாக இருந்தது. அதை புரிந்து கொண்ட குல்ஷன் உடனே அதைச் சரி செய்ய முன் வந்தார்.

மேலும் அந்த தலையணையை எடுக்க வேண்டும் என்றால் எடுத்துவிடலாம், எனக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை, உங்களுக்கு ஓகேவா என்று கேட்டார். குல்ஷன் தேவய்யா இவ்வாறு நடந்து கொண்டது உண்மையில் எனக்கு அவர் மீதான மதிப்பையும் மரியாதையும் அதிகப்படுத்தி விட்டது. இது மட்டும் இல்லாமல் அவரது இந்த நடவடிக்கை என்பது நடிப்பின் மீது அவர் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடனும் பயபக்தியுடனும் இருக்கிறார் என்பதை காட்டுகிறது’’ என்று கூறியுள்ளார். நடிகை கிரிஜாவின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.