Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பரத்வாஜுக்கு ‘குறள் இசையோன்’ பட்டம்

பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களுக்கு இசை அமைத்து, அனைத்து பாடல்களையும் ஹிட்டாக்கியவர் பரத்வாஜ். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு 1,330 திருக்குறளை 1,330 பாடகர்களை வைத்து பாடச்செய்து, திருக்குறள் முழுவதையும் இசை வடிவில் உருவாக்கினார். சமீபத்தில் கனடாவில் டொராண்டோ தமிழ்ச் சங்கத்தில் நடந்த உலக திருக்குறள் மாநாட்டில் பரத்வாஜை சிறப்பு விருந்தினராக பங்கேற்க வைத்தனர். 1,330 திருக்குறளை இசை வடிவில் வழங்கிய அவருக்கு பாராட்டு விழா நடத்தி, ‘குறள் இசையோன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

மேலும், கனடா அரசாங்கம் பரத்வாஜின் திருக்குறள் தமிழ்ச்சேவையை பாராட்டி சான்றிதழ் கொடுத்து கவுரவித்தது. விழாவில் அந்த நாட்டிலுள்ள தமிழ்ப் பாடகர்கள் பங்கேற்று, பரத்வாஜ் இசை அமைத்த திருக்குறள் பாடல்களை பாடி ரசிகர்களை பரவசப்படுத்தினர். பரத்வாஜும், அவரது மகள் ஜனனியும் இணைந்து திருக்குறள் பாடினர். ‘12 வருட கடுமையான உழைப்பில் உருவாக்கிய திருக்குறள் இசை ஆல்பத்தை பாராட்டி கவுரவித்ததற்கு மிகவும் நன்றி’ என்றார் பரத்வாஜ்.