Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நாடு முழுவதும் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் விஜய் சேதுபதியுடன் சந்திப்பு

சென்னை: சிராஜ் மற்றும் அருண் என்ற இரு இளைஞர்கள், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் கிட்டதட்ட 3500 கி.மீ ட்ரை சைக்கிள் மூலம் பயணித்து, இயற்கைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் விஜய் சேதுபதியை அவரது வீட்டில் சந்தித்து, 2002-வது மரக்கன்றை அவருக்கு வழங்கி மரியாதை செய்தனர். இந்த சந்திப்பின்போது விஜய் சேதுபதி அவர்களுக்கு பண உதவி செய்ய முன்வந்தார்.

ஆனால் அந்த இளைஞர்கள், ‘‘எங்களுக்கு சினிமாதான் கனவு, அதற்கு உதவி செய்யுங்கள்’’ என கோரிக்கை வைத்தனர்.

இதனைக் கேட்ட விஜய் சேதுபதி, ‘‘நீங்க ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கணுமா? நான் உங்களை சேர்த்து படிக்க வைக்கிறேன். இல்லை, வேறு எந்த உதவி வேணும்னாலும் கேளுங்கடா தம்பி, நான் செய்யுறேன்’’ என்று கூறியிருக்கிறார். இந்த உரையாடல் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.