Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கசப்பான அனுபவங்களால் ஐ.டி வேலைக்கு மாறிய நடிகை

சென்னை: தீக்‌ஷா சேத் 2010ல் வெளியான ‘வேதம்’ படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பணக்கார காதலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற அவர், அதன் பிறகு பிரபாஸுடன் ‘ரெபெல்’ படத்தில் நடித்தார். தெலுங்கில் நல்ல இடத்தைப் பிடித்தாலும், அவரது திரைவாழ்க்கை எதிர்பாராத விதமாக முடிவுக்கு வந்தது. 2012ல் ‘ஊ கொடதாரா உலிக்கிபடதாரா’ படத்தில் கடைசியாக தோன்றிய தீக்ஷா சேத், தமிழில் சிம்பு ஜோடியாக வேட்டை மன்னன் படத்தில் நடித்தார். அந்த படம் இடையிலே கைவிடப்பட்டது. தெலுங்கில் வாய்ப்புகள் குறைந்ததால் பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கினார். அங்கு அவருக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. திரையுலகிற்கு விடை கொடுத்த தீக்‌ஷா சேத், தற்போது லண்டனில் வசிக்கிறார். அங்கு ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ‘‘திரைப்படங்களின் மாய உலகை விட்டுவிட்டு, ஒரு சாதாரண ஊழியராக மாறுவது என்பது சாதாரண விஷயமல்ல. இருப்பினும், சமூக ஊடகங்களில் நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன். அவ்வப்போது எனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறேன்’’ என்கிறார்.