Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிளாக்மெயில் விமர்சனம்...

கோயம்புத்தூரில் ஒரு நிறுவனத்தில் குட்டியானை ஓட்டும் ஜி.வி.பிரகாஷ் குமார், முக்கியமான பார்சல் ஒன்று திருடு போக காரணமாகிறார். சட்டவிரோதமாக கடத்தப்படும் போதைப்பொருளான அதன் மதிப்பு 50 லட்ச ரூபாய் என்பதால், அவரது காதலி தேஜூ அஸ்வினியை அந்த நிறுவனத்தின் முதலாளி முத்துக்குமார் கடத்துகிறார். தொழிலதிபர் ஸ்ரீகாந்த், பிந்து மாதவியின் பெண் குழந்தை, சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் காணாமல் போகிறது. இந்த இரண்டு சம்பவமும் இணையும் இடத்தில் கதை தொடங்கும்.

சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் ஜானரில் விறுவிறுப்பாகவும், திடீர் ட்விஸ்டுகளும் நிறைந்த இப்படத்தை மு.மாறன் எழுதி இயக்கியுள்ளார். பரபரப்பான கதைக்கு ஏற்ப ஜி.வி.பிரகாஷ் குமார் சுறுசுறுப்பாகவும், இயல்பாகவும் நடித்து அசத்தியுள்ளார். காதலியை மீட்க போராடும் அவரது வேகத்துக்கு ஈடுகொடுத்து தேஜூ அஸ்வினி நடித்துள்ளார். குழந்தையை மீட்க போராடும் தம்பதியாக ஸ்ரீகாந்த், பிந்து மாதவி அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிறுமியின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. லிங்கா, முத்துக்குமார், ரமேஷ் திலக், ரெடின் கிங்ஸ்லி, கிரிஜா ஹரி, ஷாஜி, ஹரிப்பிரியா ஆகியோரும் நிறைவாக நடித்துள்ளனர். பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு சாம் சி.எஸ் கடுமையாக உழைத்துள்ளார். ஒரு பாடலுக்கு இமான் இசை அமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு நேர்த்தியாக இருக்கிறது. திடீர் ட்விஸ்டுகளில் செலுத்திய கவனத்தை கேரக்டர்களின் உணர்வுகளுக்கும் செலுத்தியிருந்தால், படம் அழுத்தமான முத்திரை பதித்திருக்கும்.