Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

போபோ சசியின் பிஃபோர் ஐ ஃபேட் அவே இசை ஆல்பம்

சென்னை: போபோ சசி இசை அமைத்துள்ள ஆல்பம், ‘பிஃபோர் ஐ ஃபேட் அவே’. ராப் பாடகரும், பாடலாசிரியருமான யூகி பிரவீன் இயக்கியுள்ளார். அரவிந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, இனாரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் பத்மநாபன் தயாரித்துள்ளார். இதன் வெளியீட்டு விழாவில் இசை அமைப்பாளர்கள் முரளி, சி.சத்யா, காந்த் தேவா, நடிகர் ஹரி கிருஷ்ணன், பாடகர் ஹைடு கார்த்திக், ராப் பாடகி ஐ.கே.பெர்ரி, பாடகி அக்‌ஷிதா சுரேஷ் கலந்துகொண்டனர்.

அப்போது காந்த் தேவா பேசுகையில், ‘நான் கீ-போர்ட் பிளேயராக மாற சித்தப்பா முரளியே காரணம். இசையை முழுமையாக கற்கவில்லை. தேவா, சபேஷ், முரளி இசை அமைப்பதை பார்த்து கறறுக்கொண்டேன். ஒரு பாடலுக்கு போபோ சசி பயன்படுத்தும் சவுண்ட் வித்தியாசமாக இருக்கும். எனது வெற்றிக்கு அவரது பங்களிப்பும் காரணம்’ என்றார். போபோ சசி பேசும்போது, ‘இந்தபாடலை அக்‌ஷிதா சுரேஷ் மென்மையாக பாடியிருந்தார். ‘பிஃபோர் ஐ ஃபேட் அவே’ என்பதால், குரலில் அழுத்தம் வேண்டும் என்று கேட்டேன். உடனே அவர் வேறொரு வெர்ஷனில் பாடி அசத்தினார்’ என்றார்.