Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

உடல் எடையால் அவதிப்படும் மஞ்சிமா மோகன்

மலையாள படவுலகில் இருந்து வந்து, சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர், மஞ்சிமா மோகன். ‘தேவராட்டம்’ என்ற படத்தில் தனக்கு ஜோடியாக நடித்திருந்த கவுதம் ராம் கார்த்திக்கை காதலித்து, இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து ‘சுழல் 2’ என்ற வெப்தொடரில், நாகம்மா என்ற பாலியல் தொழிலாளி வேடத்தில் நடித்திருந்தார். இந்த வெப்தொடருக்கான புரமோஷன்களில் பங்கேற்று பேட்டியளித்து வந்த மஞ்சிமா மோகன், தனது உடல் எடையை எப்படி குறைத்தேன் என்பது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘எனக்கு பிசிஓடி என்ற நோய் இருந்தது. எனது உடல் எடை சற்று அதிகமாக இருந்ததால், அதுவே எனக்கு பெரிய பிரச்னையாக மாறியது.

எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்து, அறுவை சிகிச்சை மூலம் எடையை குறைக்க மருத்துவர்களை சந்தித்தேன். எனது உடல் எடைதான் மிகப்பெரிய பிரச்னை என்பது போல் நம்மை சுற்றியிருப்பவர்கள் பேசுகின்றனர். நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா என்பது மிகவும் முக்கியம். ஒருவேளை உடல் எடையை குறைத்து புதிய தோற்றத்துக்கு மாறினால், மேலும் சில பட வாய்ப்புகள் கூடுதலாக கிடைத்திருக்கலாம். அதற்கு பிறகு ஒருவர் கூட, நாம் எப்படி இருக்கிறோம் என்று நலம் விசாரிக்க மாட்டார்கள். எனக்கு நடிப்பை தவிர வேறு சில இலக்குகள் இருக்கின்றன’ என்றார்.