Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரூ.30 ஆயிரம் கோடியை இழந்த கரீஷ்மா

கடந்த 2003ல் பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூருக்கும், டெல்லி தொழிலதிபர் சஞ்சய் கபூருக்கும் ஆடம்பர திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு 2 வாரிசுகள் இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடுகளின் காரணமாக விவாகரத்து மூலம் அவர்கள் பிரிந்தனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, கரீஷ்மா கபூருக்கு சஞ்சய் கபூர் 70 கோடி ரூபாய் கொடுத்தார். அதோடு, தனது வாரிசுகளின் படிப்புக்காக மாதம் 10 லட்ச ரூபாய் கிடைக்கும் வகையில், 14 கோடி ரூபாய்க்கு டெபாசிட் பத்திரம் வழங்கி, மும்பையில் ஒரு வீட்டையும் வாங்கிக் கொடுத்தார். ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவராக சஞ்சய் கபூர் இருந்தார். லண்டனில் போலோ விளையாடியபோது, திடீரென்று அவரது வாயில் தேனீ புகுந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணம் அடைந்தார்.

அவரது மரணத்தால், ரூ.30 ஆயிரம் கோடி நிறுவனத்தின் வாரிசு யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், கரீஷ்மா கபூருக்கும் மற்றும் 2 வாரிசுகளுக்கும் இந்த சொத்தில் சிறிதளவு பங்கு கூட கிடைக்காது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சஞ்சய் கபூரின் 3வது மனைவி பிரியா சச்தேவ் மட்டுமே சொத்துக்கு உரிமை கொண்டாட முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரியா சச்தேவுக்கும், சஞ்சய் கபூருக்கும் ஒரு மகன் இருக்கிறார். பிரியா சச்தேவ் ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். எனவே, சஞ்சய் கபூரின் தனிப்பட்ட சொத்து மற்றும் அவரது கம்பெனிக்கு இந்த மூவர் மட்டுமே உரிமை கோர முடியும். சஞ்சய் கபூரின் சொத்தை வசப்படுத்த, கம்பெனியில் பிரியா சச்தேவ் இயக்குனராக இணைந்துவிட்டார். அவர் மனம் வைத்தால் மட்டுமே சஞ்சய் கபூரின் சொத்தில் கரீஷ்மா கபூரின் வாரிசுகளுக்கு பங்கு தர முடியும்.