Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பாய் திரைப்படம் தள்ளிப்போனது ஏன்?

சென்னை: நேற்று திரைக்கு வர இருந்த பாய் - ஸ்லீப்பர் செல் திரைப்படம் தள்ளிப்போயுள்ளது. இது குறித்து கே ஆர் எஸ் ஃபிலிம்டம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: எங்களது தயாரிப்பில் உருவான ‘பாய் - ஸ்லீப்பர் செல்’ திரைப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் சில எதிர்பாராத காரணங்களால் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்கள் இருந்ததால் நேற்று வெளியாகவில்லை. விரைவில் இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் களையப்பட்டு அதிக அளவிலான திரையரங்குகளில் ‘பாய் ஸ்லீப்பர் செல்’ திரைப்படம் வெளியாவதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறோம். ரசிகர்கள் சூழலை புரிந்து கொண்டு தொடர்ந்து ஆதரவுதர வேண்டும் என்று வேண்டுகிறோம்.