நட்டி நட்ராஜ் நடித்த ‘சதுரங்க வேட்டை’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹெச்.வினோத், பிறகு கார்த்தி நடித்த ‘தீரன்: அதிகாரம் ஒன்று’, அஜித் குமார் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி நடிக்கும் ‘ஜன நாயகன்’...
நட்டி நட்ராஜ் நடித்த ‘சதுரங்க வேட்டை’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹெச்.வினோத், பிறகு கார்த்தி நடித்த ‘தீரன்: அதிகாரம் ஒன்று’, அஜித் குமார் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி நடிக்கும் ‘ஜன நாயகன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து ஹெச்.வினோத் யாரை இயக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழில் அவர் பிரமாண்டமான படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் ஆகியோரை தொடர்ந்து ஹெச்.வினோத்தும் அவர்களின் வழிகாட்டுதல்படி தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இப்படத்தை ‘குற்றம் கடிதல்’, ‘மகளிர் மட்டும்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.பிரம்மா இயக்குகிறார். தவிர ‘சுழல்: தி வோர்டெக்ஸ்’ சீசன் 1, ‘சுழல்: தி வோர்டெக்ஸ்’ சீசன் 2 ஆகிய வெப்தொடர்களையும் அவர் இயக்கியுள்ளார். ஹெச்.வினோத் திரைக்கதை எழுதுகிறார். நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.