Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தமிழக, கேரள மக்களின் சகோதரத்துவத்தை சொல்லும் வீரவணக்கம்

சென்னை: மலையாள இயக்குனர் அனில் வி.நாகேந்திரன் எழுதி இயக்கி தமிழில் அறிமுகமாகும் படம், ‘வீரவணக்கம்’. கம்யூனிஸ்ட் தோழராக சமுத்திரக்கனி நடித்துள்ளார். மற்றும் பரத், தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நடித்துள்ளனர். புரட்சிப் பாடகியும், சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான 95 வயது பி.கே.மேதினி அம்மா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அனில் வி.நாகேந்திரன் இயக்கிய மலையாளப் படமான ‘வசந்தத்தின்டே கனல் வழிகளில்’ என்ற படத்தின் 2வது பாகமாக ‘வீரவணக்கம்’ உருவாகியுள்ளது. ம்.கே.அர்ஜூனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகிய 5 பேர் இசை அமைத்துள்ளனர். டி.எம்.சவுந்தரராஜன் மகன் டி.எம்.எஸ்.செல்வகுமார், சினிமாவில் பாடகராக அறிமுகமாகிறார்.

இப்படம் குறித்து அனில் வி.நாகேந்திரன் கூறியதாவது: தேசிய விருது பெற்ற சமுத்திரக்கனி, சுரபி லட்சுமி ஆகியோரை மலையாளத்தில் ‘வசந்தத்தின்டே கனல் வழிகளில்’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தினேன். ‘வீரவணக்கம்’ படத்தில் பி.கிருஷ்ணபிள்ளை கேரக்டரில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். அவர் எப்படி கம்யூனிஸ்டாக மாறினார் என்பது திரைக்கதை. தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும், இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் அபூர்வ படமாக உருவாக்கப்பட்டுள்ளது.