Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கனடாவில் கமலுக்கு கிடைத்த கவுரவம்

தமிழ் படவுலகின் முன்னணி நடிகர் கமல்ஹாசன், இதுவரை அதிக விருதுகள் வாங்கிய பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 5 தேசிய விருதுகள், 20 பிலிம்பேர் விருதுகள், 11 திரைப்பட விருதுகள் மற்றும் வேறு சில விருதுகள் மற்றும் சர்வதேச திரைப்பட விருதுகள் பெற்றுள்ளார். ஒன்றிய அரசு வழங்கிய பத்ம, பத்மபூஷண் மற்றும் பிரான்ஸ் அரசு வழங்கிய செவாலியர் விருது பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் அவர் மேலும் ஒரு உயரிய விருது பெற்றுள்ளார். கனடாவில் அல்பெர்ட்டா இந்திய திரைப்பட விழா-2025 நடந்தது. இதில் கோல்டன் பீவர் விருதை கமல்ஹாசன் வென்றார். இந்த விருது சினிமாவை மறுவடிவமைப்பவர்கள், கலாசாரங்களை இணைப்பவர்கள் மற்றும் உலகை ஊக்குவிப்பவர்களாக இருக்கும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருது வாங்கும் முதல் நபர் கமல்ஹாசன் ஆவார். தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க தயாராகி வரும் அவர், ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 3’ படத்திலும் நடிக்கிறார்.