மும்பை, மே 15: கேன்ஸ் திரைப்பட விழா, கோலாகலமாக துவங்கியுள்ளது. வரும் 24ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. பாலிவுட் நடிகைகளான ஐஸ்வர்யா ராய் பச்சன், அலியா பட், ஜான்வி கபூர் ஆகியோர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடக்கவிருக்கிறார்கள். அலியா பட் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் முதல் முறையாக கேன்ஸ்...
மும்பை, மே 15: கேன்ஸ் திரைப்பட விழா, கோலாகலமாக துவங்கியுள்ளது. வரும் 24ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. பாலிவுட் நடிகைகளான ஐஸ்வர்யா ராய் பச்சன், அலியா பட், ஜான்வி கபூர் ஆகியோர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடக்கவிருக்கிறார்கள்.
அலியா பட் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் முதல் முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய் பச்சனோ கடந்த 2002ம் ஆண்டில் இருந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வருகிறார். மேலும் கடந்த 2003ம் ஆண்டு கேன்ஸ் நடுவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய்.
தொடக்க விழாவில் இந்திய நடிகை ஊர்வசி ரவுட்டேலாதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தார் ஊர்வசி. அவர் கையில் இருந்த கிளி வடிவிலான பர்ஸ் பலரையும் கவர்ந்தது. அந்த கிளி பர்ஸின் விலை ரூ. 4 லட்சத்து 68 ஆயிரம் என தகவல் வெளியாகியிருக்கிறது.