விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற படம் கடந்த வெள்ளியன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி அளித்த பேட்டியில், ‘விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த ‘சகாப்தம்’, ‘மதுரவீரன்’, ‘படை தலைவன்’ ஆகிய படங்களை பார்த்தேன். அவரது அப்பாவை போலவே சிறப்பாக நடித்திருந்தார். ‘கேப்டன் பிரபாகரன்’ படம் வெளியாகி 34 வருடங்களாகி விட்டதால்,...
விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற படம் கடந்த வெள்ளியன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி அளித்த பேட்டியில், ‘விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த ‘சகாப்தம்’, ‘மதுரவீரன்’, ‘படை தலைவன்’ ஆகிய படங்களை பார்த்தேன். அவரது அப்பாவை போலவே சிறப்பாக நடித்திருந்தார். ‘கேப்டன் பிரபாகரன்’ படம் வெளியாகி 34 வருடங்களாகி விட்டதால், எங்களிடம் இப்படத்தின் நெகட்டிவ் இல்லை. இதனால், படத்தின் பிரதியில் இருந்து ஒவ்வொரு பிரேமையும் மெருகேற்றி வெளியிட்டோம். சில வருடங்களுக்கு முன்பு ‘கேப்டன் பிரபாகரன் 2’ என்ற படத்தை இயக்க திட்டமிட்டேன்.
செம்மர கடத்தலை மையப்படுத்தி 2ம் பாகத்தை உருவாக்க முடிவு செய்தேன். அப்போது ‘புஷ்பா: தி ரைஸ்’ படம் வெளியானதால், உடனே அந்த முயற்சியை கைவிட்டு விட்டேன். இப்போது ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை பார்க்கும்போது சிலர், ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் காட்சிகளை போல் இருக்கிறது என்று சொல்கின்றனர். இதுபோன்ற படங்களை நாம் உருவாக்கும்போது, இப்படிப்பட்ட ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்யும். அந்த நேரத்தில் 2வது பாகத்துக்கு ஹீரோ கிடைக்கவில்லை. இன்று சண்முக பாண்டியன் இருக்கிறார். அவரை வைத்து 2ம் பாகத்தை இயக்குவேன்’ என்றார்.