Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘பிறப்புறுப்பில் இரும்பு கம்பி திணிப்பேன்’ பல ஆண்களுடன் உறவு வைக்க கொடுமைப்படுத்திய கணவர்: செலினா ஜெட்லி அதிர்ச்சி தகவல்

மும்பை: பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த பீட்டர் ஹாக் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மும்பை நீதிமன்றத்தில் தன் கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார் செலினா ஜெட்லி. அவர் தன் மனுவில் சொன்ன தகவல்கள் இப்போது வெளியே கசிந்துள்ளது. அந்த தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது மனுவில் செலினா ஜெட்லி கூறியிருப்பதாவது: பீட்டருக்கு அடிக்கடி கோபம் வரும். மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. இதனால் தான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். இந்தியாவில் மணமகனுக்கு மணமகள் குடும்பத்தார் விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் கொடுப்பார்கள். எனக்கும் வேண்டும் என்று கேட்டார். அவருக்கு ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ. 6 லட்சம் மதிப்புள்ள cufflinks கொடுக்கப்பட்டது.

இரட்டை பிள்ளைகள் பிறந்தபோது தையல் காயம் சரியாகும் வரையாவது வேலைக்கு செல்லாமல் லீவு எடுக்குமாறு கூறியதற்கு என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை பூட்டிவிட்டார். பிரசவம் நடந்த 3 வாரத்தில் அவர் இப்படி நடந்து கொண்டார். பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துவிட்டு எனக்கு உதவி செய்தார். 2012ம் ஆண்டு டெல்லியில் நடந்த கூட்டு பலாத்கார சம்பவம் குறித்து அறிந்த பிறகு எப்பொழு சண்டை வந்தாலும் ‘உன் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை திணித்துவிடுவேன். உனக்கு இது தேவை தான்’ என மிரட்டியிருக்கிறார் பீட்டர். அதனால் பயத்திலேயே வாழ்ந்து வந்தேன் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செலினாவின் வக்கீல் அரவிந்த் சிங் கூறியது: செலினா ஜெட்லியை ஒரு செக்ஸ் பொருள் போன்று பயன்படுத்தி வந்தார் பீட்டர் ஹாக். 2014ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை செலினாவை தன் நிறுவன போர்டு ஆஃப் டைரக்டர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி வந்தார் பீட்டர். அப்படி செய்தால் அது தன் வேலைக்கு உதவும் என்றார். மேலும் இயற்கைக்கு புறம்பான வகையில் செலினாவுடன் உறவு வைத்துக் கொண்டார் பீட்டர். செலினா மீது பாசமே இல்லாமல் உறவுக்காக மட்டும் அவரை பயன்படுத்தினார்.

செலினாவை ஆடையில்லாமல் புகைப்படங்கள் எடுத்தார் பீட்டர் ஹாக். செக்ஸ் விஷயத்தில் தான் சொல்வதை எல்லாம் கேட்காவிட்டால் அந்த புகைப்படங்களை மீடியாவிடம் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டி வந்தார். பீட்டருக்கு ஒரு வேலை கிடைத்தால் இப்படி எல்லாம் கொடுமைப்படுத்த மாட்டார் என்கிற நம்பிக்கையில் அவர் கேட்டதை செய்தார் செலினா ஜெட்லி. குழந்தைகளுக்கு முன்பு செலினாவை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கிறார் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு வக்கீல் கூறியுள்ளார். இந்த தகவல்களை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.