Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சென்ட்ரல் விமர்சனம்

கிராமத்தை சேர்ந்த ‘காக்கா முட்டை' விக்னேஷ், குடும்பத்தின் வறுமையை போக்க, சென்னையில் பேரரசுவுக்கு சொந்தமான நூற்பாலையில் வேலைக்கு சேருகிறார். அங்கு தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தும் அராஜகம் நடக்கிறது. அதை தட்டிக்கேட்க முயன்ற விக்னேஷ் உள்பட சிலர் பிரச்னையில் சிக்குகின்றனர். பிறகு என்ன நடந்தது என்பது மீதி கதை.

கதையின் நாயகனாக ‘காக்கா முட்டை’ விக்னேஷ், நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார். அவரையே நினைத்து உருகும் சோனேஷ்வரிக்கு நடிக்க அதிக வாய்ப்பு இல்லை. இயக்குனர் பேரரசு, பன்ச் டயலாக் பேசி வில்லத்தனம் செய்துள்ளார். ‘சித்தா’ தர்ஷன் மிகையான நடிப்பை குறைத்திருக்கலாம். நூற்பாலை ஊழியர்கள் ஆறு பாலா, குணா, வட மாநில ஊழியர் இயக்குனர் பாரதி சிவலிங்கம் ஆகியோர், இயல்பான நடிப்பில் கவனத்தை ஈர்க்கின்றனர்.

வினோத் காந்தி, ஒளிப்பதிவு தெளிவாக இருக்கிறது. இசையில் இளாவின் கடுமையான உழைப்பு தெரிகிறது. எடிட்டர் விது ஜீவாவின் பணி குறிப்பிடத்தக்கது. ஆதிக்க வர்க்கத்தை மீறி எப்படி ஜெயிக்க வேண்டும் என்று, இயக்குனர் பாரதி சிவலிங்கம் பாடம் நடத்தியுள்ளார். திரைக்கதை மற்றும் காட்சிகளில் இன்னும் கூட அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.