கடந்த 1983 மார்ச் 4ம் தேதி திரைக்கு வந்து வெற்றிபெற்ற ‘உயிருள்ளவரை உஷா’ என்ற படத்தை அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார், இதன் இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான டி.ராஜேந்தர். தன்னுடைய அனைத்து படங்களையும் அடுத்தடுத்து ரீ-ரிலீஸ் செய்வதற்காக டி.ஆர் டாக்கீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர் கூறுகையில், ‘தஞ்சை சினி ஆர்ட்ஸ் சார்பில் நான்...
கடந்த 1983 மார்ச் 4ம் தேதி திரைக்கு வந்து வெற்றிபெற்ற ‘உயிருள்ளவரை உஷா’ என்ற படத்தை அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார், இதன் இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான டி.ராஜேந்தர். தன்னுடைய அனைத்து படங்களையும் அடுத்தடுத்து ரீ-ரிலீஸ் செய்வதற்காக டி.ஆர் டாக்கீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர் கூறுகையில், ‘தஞ்சை சினி ஆர்ட்ஸ் சார்பில் நான் தயாரித்த முதல் படம், ‘உயிருள்ளவரை உஷா’. என் காதல் மனைவி உஷா தயாரித்தார்.
இப்போது ரீ-ரிலீஸில் பல படங்கள் சாதனை படைத்துள்ளன. எனவே, இப்படத்தின் ரீ-மாஸ்டரிங் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். பாடல்களை நவீனப்படுத்தி, எனது டி.ஆர் டிஜி மியூசிக் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறேன். ‘ஒருதலை ராகம்’ படத்தை நான் இயக்கியபோதே ரஜினிகாந்தும், நானும் நல்ல நண்பர்கள். எனது ‘ரயில் பயணங்களில்’ படத்தை பார்த்து கே.பாலசந்தர், ரஜினிகாந்த் இருவரும் மனம் திறந்து பாராட்டினர். பிறகு ரஜினிகாந்தும், நானும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற முடிவு செய்து ஒரு கதையை சொன்னேன். அதை கேட்டு பாராட்டிய ரஜினிகாந்த், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படத்தில் நடிக்கவில்லை. பிறகு செயின் ெஜயபால் என்ற ‘உயிருள்ளவரை உஷா’ படத்தின் கேரக்டரில் நான் நடித்தேன். செயின் ஜெயபால் ரோலில் அவர் நடித்திருந்தால், அதை ரஜினிகாந்தின் ஸ்டைலுக்கு தகுந்த மாதிரி மாற்றி படமாக்கி இருப்பேன்’ என்றார்.