Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சாந்தினி நடிக்கும் பட்டர்ஃபிளை

சென்னை: திரைப்பட பாடல்களுக்கு இணையாக வீடியோ ஆல்பத்தில் இடம்பெறும் பாடல்களும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்று வருகின்றன. அந்தவகையில், நேற்று பெண்கள் சமத்துவ தினத்தையொட்டி ‘பட்டர்ஃபிளை’ என்ற ஆல்பம் வெளியிடப்பட்டது. பெண் நினைத்தால் அவளுக்கும், அவளை சார்ந்தவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்து கொடுக்க முடியும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தில், பெண்களின் இருவித வாழ்க்கை முறையை காட்சிப்படுத்தியுள்ளனர்.

எந்தவொரு சூழ்நிலையாக இருந்தாலும், தங்களை அதற்கேற்ப அழகாக மாற்றும் சக்தி பெண்ணுக்கும், பட்டாம்பூச்சிக்கும் உண்டு என்பதால் ‘பட்டர்ஃபிளை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. காந்தாரா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்பாடலில் சாந்தினி, ஷ்ரதா ராவ், விஷ்ணு, தயாரிப்பாளர் மதியழகன் நடித்துள்ளனர்.

இவர்களில் மதியழகனுக்கு பார்த்திபன் பின்னணி குரல் கொடுத்துள்ளார். கவிஞர் மணி எழுதிய பாடலுக்கு அச்சு ராஜாமணி இசை அமைத்துள்ளார். அமலா, அச்சு ராஜாமணி இணைந்து பாடியுள்ளனர். பிராங்க்ளின் ரிச்சர்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமராஜன் நடிப்பில் வெளியான ‘சாமானியன்’ என்ற படத்துக்கு கதை எழுதியிருந்த வி.கார்த்திக் குமார் இயக்கியுள்ளார்.