சென்னை: டான்ஸ் மாஸ்டர் பிரபு ஸ்ரீநிவாஸ் எழுதி இயக்கியுள்ள படம், ‘அக்யூஸ்ட்’. உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபு சாலமன், பிரபாகர், பவன், பெங்களூரு டானி, சுபத்ரா நடித் துள்ளனர். ஐ.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்ய, ‘உத்தரவு மகாராஜா’ நரேன் பாலகுமார் இசை அமைத்துள்ளார். ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன்,...
சென்னை: டான்ஸ் மாஸ்டர் பிரபு ஸ்ரீநிவாஸ் எழுதி இயக்கியுள்ள படம், ‘அக்யூஸ்ட்’. உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபு சாலமன், பிரபாகர், பவன், பெங்களூரு டானி, சுபத்ரா நடித் துள்ளனர். ஐ.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்ய, ‘உத்தரவு மகாராஜா’ நரேன் பாலகுமார் இசை அமைத்துள்ளார். ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் சார்பில் உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் இணைந்து தயாரித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
படம் குறித்து உதயா கூறுகையில், ‘தமிழ் படங்களில் கன்டென்ட் முக்கியம். அதற்காகவே இவ்வளவு நாள் காத்திருந்தேன். இது நல்ல கன்டென்ட், தரமான படமாக வழங்கியுள்ளோம். பார்த்து ரசித்து ஆதரவு கொடுங்கள். படம் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனம் தேவை இல்லை என்று சொன்னாலும், ஒவ்வொரு படத்துக்கும் விமர்சனம் அவசியம் தேவை என்பது என் கருத்து. அது மிகவும் ஆரோக்கியமாக இருந்தால் நன்றாக இருக்கும். சம்பந்தப்பட்ட கலைஞர்கள் தங்கள் தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு உருவாகும்’ என்றார்.