Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சித்தூர் உண்மை சம்பவத்தில் ஜனனி

ஸ்ரீகிருஷ்ணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மவுலி எம்.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள படம், ‘உசுரே’. நவீன் எழுதி இயக்கியுள்ளார். படம் குறித்து ஹீரோயின் ஜனனி கூறுகையில், ‘இயக்குனர் என்னிடம் சொன்னதை விட படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி படம் ரிலீசாகிறது’ என்றார். ஹீரோ டீஜே கூறும்போது, ‘நான் கலைத்துறையில் ஈடுபட்ட நாட்களை நினைக்கும்போது பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. இசைதான் என்னை இவ்வளவு உயரத்துக்கு அழைத்து வந்தது. என் சிறுவயதில் இருந்தே யாரிடமும் சரளமாக பேச மாட்டேன். இசையிடம் மட்டுமே பேசுவேன். என் உணர்வுகளை பாடல்களின் மூலம் வெளிப்படுத்தி பாடி தயாரிப்பேன். எந்த சினிமா பேக்கிரவுண்டும் இல்லாத ஈழத்தமிழ் குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன்.

என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தவர், இயக்குனர் வெற்றிமாறன். ‘அசுரன்’ படத்தில் என்னை அறிமுகப்படுத்திய அவருக்கு நன்றி. இந்த படத்தின் மூலம் திடீரென்று என் வாழ்க்கை மாறியது. அதிக சந்தோஷமும் கிடைத்தது. இந்த படத்தை பார்த்துவிட்டு என்னை தேடி வந்து கதை சொன்ன இயக்குனர்களுக்கு நன்றி. என்மீது நம்பிக்கை வைத்த ‘உசுரே’ இயக்குனர் நவீனுக்கு நன்றி. சித்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி ‘உசுரே’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘அசுரன்’ படத்தில் நடித்த கேரக்டருக்கு நேரெதிர் கதாபாத்திரம் கிடைத்துள்ளது. நான் சிம்புவின் ரசிகன். இப்படத்தில் நடிக்கும்போது, சிம்பு நடித்த ‘கோவில்’ என்ற படம் என் ஞாபகத்துக்கு வந்தது. அதை இன்ஸ்பிரேனாக நினைத்து இப்படத்தில் நான் நடித்தேன். ‘உசுரே’ என்ற அருமையான படத்தை கொடுத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி’ என்றார்.