சென்னை: விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், ‘அங்கம்மாள்’. மற்றும் சரண், ‘நாடோடிகள்’ பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் நடித்துள்ளனர். அஞ்சோய் சாமுவேல் ஒளிப்பதிவு செய்ய, முகமது மக்பூல் மன்சூர் இசை அமைத்துள்ளார். வரும் 21ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை ஸ்டோன் பென்ச், என்ஜாய் பிலிம்ஸ், ஃபிரோ மூவி ஸ்டேஷன் இணைந்து தயாரித்துள்ளன.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீதா கைலாசம் கூறியதாவது: நான் பிறந்து வளர்ந்தது கிராமம் என்பதால், அங்கம்மாள் என்ற கேரக்டரில் என்னால் சிறப்பாக நடிக்க முடிந்தது. வழக்கமான அம்மா வேடங்களில் இது மிகவும் வித்தியாசமானது. கேரக்டருக்காக வீட்டில் பீடி, சுருட்டு புகைக்க பயிற்சி பெற்றேன். என் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும் என்று சொல்கிறார்கள். அப்படி கிடைத்தால் மகிழ்ச்சி.
