Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சினிமாவில் விலகலா: அமிதாப் பச்சன் பதிவால் பரபரப்பு

மும்பை: இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் (82), பான் இந்தியா படமாக திரைக்கு வந்த ‘கல்கி 2898 ஏடி’ என்ற படத்திலும், தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘வேட்டையன்’ என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், விளம்பரங்கள் மற்றும் டி.வி நிகழ்ச்சிகளிலும் பிசியாக இருக்கிறார். சமீபத்தில் அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்.

இந்த வயதிலும் இளம் நடிகர் களுடன் போட்டி போட்டு நடித்து வரும் அவர், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ‘செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று குறிப்பிட்டிருந்தார். அமிதாப் பச்சனின் இப்பதிவைப் படித்த அவரது ரசிகர்களும், நெட்டிசன்களும் பலத்த அதிர்ச்சி அடைந்தனர். திரையுலகில் இருந்து விலகப்போவதையே இப்படி அவர் சூசகமாக குறிப்பிட்டதாக பலர் பேசினர். இதையறிந்த அமிதாப் பச்சன், ‘நான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பதிவுவெளியிட்டதில் என்ன தவறு இருக்கிறது? நான் படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதே அந்தப் பதிவுக்கான உண்மையான அர்த்தம்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்களும், நெட்டிசன்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.