Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சினிமாவுக்கு முழுக்கு போட்டு ஜோதிடரான நடிகை

மும்பை: இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை துலிப் ஜோஷி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இந்நிலையில், சினிமா நடிப்பில் பிசியாக இருந்தபோதே திடீரென துலிப் ஜோஷி நடிப்பில் இருந்து விலகி ஜோதிட துறையில் தடம் பதித்தார். தற்போது பிரபல ஜோதிடராகவும் இருந்து வருகிறார். மேலும் இது மட்டுமின்றி தனது கணவர் வினோத் நாயருடன் சேர்ந்து பிரபல நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.700 கோடி என கூறப்படுகிறது. இது குறித்து துலிப் ஜோஷி கூறும்போது, ‘‘ஜோதிடம் பார்ப்பது கல்லூரி காலத்தில் இருந்தே நான் செய்து வந்தேன். இதற்கு எனக்கு வழிகாட்டியாக இருந்தது எனது பாட்டிதான். அவர் மூலம்தான் ஜோதிடம் பயின்றேன். இதை நான் ஒரு பிசினஸாக செய்யவில்லை. சேவையாகவே செய்கிறேன். அதே நேரத்தில் இதற்காக கிடைக்கும் வருவாயில் நிறைய தொண்டு பணிகளை மேற்கொள்கிறேன்’’ என்றார்.