Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வா வாத்தியார் கதையால் தூங்க முடியாமல் தவித்தேன்: கார்த்தி

சென்னை: நலன் குமாரசாமி எழுதி இயக்கியுள்ள ‘வா வாத்தியார்’ என்ற படம், வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். கார்த்தி, கிரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத், ஜி.எம்.சுந்தர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்த்தி கலகலப்பாக பேசியதாவது: நலன் குமாரசாமி ஒரு ஜாலியான கதையை சொல்வார் என்று பார்த்தால், ‘வா வாத்தியார்’ என்ற கதையை சொல்லி பதற வைத்தார். இதில் என்னால் நடிக்க முடியுமா என்று, அன்று இரவு முழுக்க தூங்க முடியாமல் தவித்தேன்.

அப்போது மோட்டிவேஷனல் வீடியோவில், ‘எந்தவொரு விஷயம் உங்களை அதிகமாக பயமுறுத்துகிறதோ, எதை பார்த்து மிகவும் பயப்படுகிறோமோ, அதை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும். அங்குதான் நமக்கான வளர்ச்சியும் இருக்கும்’ என்று சொன்னார்கள். எல்லாவற்றுக்கும் பயந்து நடுங்க முடியாது. நாம் எத்தனை முறை ஜெயித்தாலும், தோற்றதை மட்டுமே பேசும் உலகம் இது. அதனால், தீவிரமாக இறங்கி அடிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடித்தேன். இந்த கதை எனக்கு கத்தி மேல் நடப்பது போல் இருந்தது.