Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கமாண்டோவின் லவ் ஸ்டோரியில் கார்த்திக் ராஜா

சென்னை: ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’. நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரரின் காதல் கதையாக உருவாகியுள்ளது. கதையின் நாயகனாக வீர அன்பரசு நடிக்கிறார். ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். இவர்களுடன் ஆகாஷ் முத்து, ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி நடிக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு. ஒளிப்பதிவு வில்லியம்ஸ். இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் சிவராமன் பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார். அவர் காலமானதால், கார்த்திக் ராஜா பின்னணி இசை அமைக்கிறார்.