Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘மீ டு’ புகாரில் சிக்கிய இயக்குனர் படத்தில் ரீமா

மலையாளம், தமிழ் உள்பட பல மொழிகளில் நடித்து வரும் ரீமா கல்லிங்கல், மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவை காதல் திருமணம் செய்துகொண்டார். கடந்த சில வருடங்களாக மலையாள படவுலகில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அத்துமீறல்களுக்கும், பாதிப்புகளுக்கும் எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ரீமா கல்லிங்கல், அந்த பிரச்னைகளுக்கு எதிராக தொடங்கப்பட்ட சினிமா பெண்கள் நல அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறார்.

குறிப்பாக மீ டு பிரசாரம் சூடுபிடித்த நேரத்தில், அந்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை காரசாரமாக கண்டித்தார். இந்நிலையில், மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் சஜின் பாபு படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உண்மையிலேயே நான் ஒரு சுயநலக்காரிதான். எனக்கு இப்படம் தேவைப்படுகிறது. நான் ஒரு நடிகையாக என் வேலையை செய்தாக வேண்டும். அதுதான் முதல் காரணம்.

இதுவே நான் இயக்குனராக அல்லது தயாரிப்பாளராக இருந்திருந்தால், நிச்சயமாக இதுபோன்ற ஒரு நபருடன் இணைந்து பணியாற்ற விரும்ப மாட்டேன். அதற்கு பதிலாக வேறொரு நபரை தேர்வு செய்வேன். அதோடு, குற்றச்சாட்டுக்கு ஆளான நபரே அதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுவிட்டார். பாதிக்கப்பட்ட அந்த பெண் இந்த விஷயத்தில் இருந்து நகர்ந்துவிட்டார். இயக்குனருடன் பேசியபோது, இதில் இன்னும் பல கோணங்கள் இருப்பது எனக்கு தெரியவந்தது’ என்றார்.