‘காந்தா’ திரைப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பு பாராட்டுகளை பெற்று வருகிறது. நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெலுங்கில் வளர்ந்துவரும் நடிகையாக உள்ளார். இவர் இந்தியில் ‘யாரியான் 2’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு சினிமா மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு அவரது நடிப்பாற்றலுடன் கூடிய அழகான தோற்றத்தால் பாக்யஸ்ரீக்கு தெலுங்கில் ‘மிஸ்டர் பச்சன்’ மற்றும் ‘கிங்டம்’ படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது துல்கர் சல்மானுடன் ‘காந்தா’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார்.
கடந்த 14ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஆனால், இப்படத்தில் துல்கர் மற்றும் சமுத்திரகனியின் நடிப்பு பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும், ஹீரோயின் பாக்யஸ்ரீ போர்ஸ் நிறைய படங்களில் நடிக்காமலேயே குமாரி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதனால், பாக்யஸ்ரீ போர்ஸ் அடுத்தடுத்த தமிழ்ப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
