Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தேர்தலில் போட்டியா? சூர்யா மறுப்பு

சென்னை: சமீப நாட்களாக நடிகர் சூர்யா, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. இது பொய்யான செய்தி என்று சூர்யா தரப்பு விளக்கம் தந்துள்ளது. ‘‘வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது மட்டுமின்றி சூர்யாவின் கோட்பாடுகளுக்கும் முரணானது. கலை உலகப் பயணமும், அகரம் ஃபவுண்டேஷன் மட்டுமே இப்போதைய அவரின் வாழ்வுக்கு போதுமான நிறைவை தந்துள்ளது. சினிமாவில் மட்டுமே அவரது கவனம் எப்போதும் இருக்கும். இதன்மூலம், அவர் பற்றி பரவும் இந்த பொய்யான செய்தியை திட்டவட்டமாக மறுக்கிறோம்’’ என சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.