மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடிப்பது மட்டுமின்றி, பின்னணி பாடுவதிலும் கவனம் செலுத்தும் மடோனா செபாஸ்டியன், முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும், தன்னால் முன்னணி நடிகையாக முடியவில்லையே என்று வருத்தப்படுகிறார். இந்நிலையில், இந்தியில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், திரிப்தி டிம்ரி, அனில் கபூர் நடிப்பில் வெளியாகி பலத்த சர்ச்சைகளை எதிர்கொண்ட ‘அனிமல்’ என்ற படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ என்ற இந்தி படத்தில் மடோனா செபாஸ்டியன் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.
ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசை அமைக்கிறார். ஏற்கனவே இதில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி, பிறகு சில பிரச்னைகளின் காரணமாக தீபிகா படுகோன் விலகினார். எனவே, ‘அனிமல்’ மூலம் பிரபலமான திரிப்தி டிம்ரியையே ஹீரோயினாக்கி விட்ட சந்தீப் ரெட்டி வங்கா, முக்கிய வேடங்களில் நடிப்பதற்கு மிருணாள் தாக்கூர், சைஃப் அலிகான், கரீனா கபூர் ஆகியோரை தொடர்ந்து மடோனா செபாஸ்டியனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.