Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கோர்ட் ரூம் கதையில் கீர்த்தி சுரேஷ்

சென்னை: ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன் சார்பில், வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோர்ட் ரூம் டிராமாவாக இப்படத்தை உருவாக்குகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர்.சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா,ஏ.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். ஓளிப்பதிவு : அருள் வின்சென்ட் இசை: சாம் சி.எஸ். எடிட்டர்: பிரசன்னா ஜி.கே.